உள்ளாட்சித் தேர்தல் -மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Default Image

உள்ளாட்சி தேர்தலில்  மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரி பொதுநல மனு ஓன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவில், பழங்குடியினத்தவர் ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறிய பின்னும் ஆதிதிராவிடர் சான்றிதழை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.எனவே உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை  விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு  பிறப்பித்துள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தலையிட இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில்  கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்