கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மஹாராஷ்டிரா.!

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மஹாராஷ்டிரா மாநிலம்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது.
நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 3,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85,975 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று புதிதாக 91 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் பலியானவர்கள் எண்ணிக்கை 3060 ஆக உள்ளது.
இந்நிலையில், சீனாவில் இதுவரை 83,040 பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் முதலில் கண்டறிப்பட்ட சீனாவைவிட மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.