கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்! சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

kodaikanal tourist

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த‌ சுற்றுலாத‌ல‌ங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில தினங்களாக வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சமீபத்தில் சாலை விபத்தும் ஏற்பட்டிருந்தது.

இதுபோன்று சூழல் நிலவி வந்தாலும், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சரளமாக வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாகவும், இந்த இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்