கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், 90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாசாரங்கள் அழியா வண்ணம் பாதுகாக்க, ஒலி/ஒளி ஆவணமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பதிவு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்த அமைச்சர், கடந்த மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப் பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்..
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…