#BREAKING: மேகதாது அணை.., அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!..!

Published by
murugan

மேகதாது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி வரும் நிலையில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில்,

தீர்மானம் 1:

“உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீதி தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேலையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.

தீர்மானம்: 2

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும்  வழங்கும்.

தீர்மானம்: 3

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து  நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

5 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

7 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

10 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

10 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

11 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

14 hours ago