சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு.!

சென்னையில் நாளை, நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டுமே என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025