சென்னையில் நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்..!

மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் காலை 05:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.
அனைத்து முனையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 09.00 மணிக்குத் தொடங்கி இரவு 10.00 மணிக்கு முனையத்தை வந்தடையும். கூடுதலாக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 09.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025