ரஷ்யா செல்லவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!

ரஷ்யா செல்லவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
ராக்கெட் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் ராக்கெட் சயின்ஸ் எனும் பயிற்சி வகுப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் 220 பேர் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 75 மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையதிற்க்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த 75 மாணவர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு பல்லாவரம் திமுக எம்எல்ஏ, அறக்கட்டளை, தனியார் நிறுவனம் என நன்கொடை வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவ மாணவிகள் ரஷ்யா செல்லும் செய்தி குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ரஷ்யா செல்லவுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நிதி உதவி வழங்குவது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.