கபடி விளையாடி மக்களை கலகலக்க வைத்த அமைச்சர் ஜெயக்குமார்…!

சென்னை ராயபுரம் ராபின்சன் மைதானத்தில், வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், அமைச்சர் ஜெயக்குமார், பரப்புரையில் ஈடுபட்டார்.
அவர் பிரச்சாரத்திற்கு முடித்துவிட்டு திரும்பும் போது, ராபின்சன் மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வீரர்காளுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்களுடன் இணைந்து கபடி விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த செயலை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் வியந்து பார்த்ததுடன், ஆரவாரத்துடன் கரவோசை எழுப்பினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025