Minister Ponmudi - Madras High court [File Image]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் பதியப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் , பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரையும் விடுதலை செய்யபட்டு தீர்ப்பு வெளியானது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் , பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. இன்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை பெற்ற காரணத்தால், பொன்முடி வகித்து வந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ஆகியவற்றை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை அடுத்து அவர் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எதுவாக 30 நாட்கள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதவிட்டனர். இதனால் இப்போதைக்கு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி சிறை செல்ல வேண்டியதில்லை.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…