தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான்!எந்த மாற்றமும் இல்லை!அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.அதில், மடிக்கணினி வழங்கும் விவகாரத்தில், முதலில் தற்போது பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கி வருகிறோம் .ஏற்கனவே படிப்பை முடித்த மாணவர்களுக்கும் பின்னர் வழங்கப்படும் என்று பேசினார்.
குறிப்பாக இருமொழி கொள்கையை பற்றியும் பேசினார் அமைச்சர் செங்கோட்டையன்.தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூறினார்.1968-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் உள்ளது.இதில் எந்த மாற்றமும் வராது; நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025