அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள பெரியகொடிவேரி பேரூராட்சியில் சந்தை திடலை மேம்படுத்த பூமிபூஜையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கின்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி திட்டத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு தற்போது வரை 943 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்காக வழங்கவேண்டிய 372 கோடி ரூபாயை விரைவில் முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
புதிய கல்விக்கொள்கையில் மழலையர் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதற்கு முன்பே தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் தமிழ்வழி பள்ளியை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.மேலும் மகாராஷ்டிராவில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளியை மீண்டும் துவங்க முதல்வர் ஆலோசனயின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.என்று தெரிவித்தார் மேலும் அவரிடம் நிரூபர்கள் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உங்களது பெயர் இடம் பெறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி இதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.என்று செங்கோட்டையன் கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…