Senthil Balaji's court custody extendedjallikattu
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின், 5 நாட்கள் காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்தது. இதனால், ஜாமீன் கிடைக்காமல் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!
இதுவரை செந்தில் பாலாஜிக்கு இதுவரை 13 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காவல் இன்றுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3-வது முறையாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…