கால்பந்தாட்டம் மீது கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

சென்னை ராயப்பேட்டையில் கால்பந்தாட்ட போட்டியை துவங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று சென்னை ராயப்பேட்டையில் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைத்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டுத்துறை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்..
அவர் கூறுகையில், திமுகவுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதானால் தான் திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டது. திமுக தலைவர் கலைஞருக்கு கால்பந்தாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகையில் கூட, கால்பந்தாட்டத்தில் பந்தை எப்படி வேண்டுமானாலும் விதவிதமாக கையாளலாம். ஆனால் கோல் போஸ்ட்டிற்குள் பந்து சென்றால் மட்டுமே வெற்றி. அதுபோல தான் வாழ்வும் என குறிப்பிட்டு இருப்பார் என கலைஞர் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
அடுத்து தமிழக முதல்வருக்கு பேட்மிட்டன், கிரிக்கெட் போட்டிகள் பிடிக்கும். எனக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தான் விளையாட்டு துறை அமைச்சராக என்னை முதல்வர் நியமித்தார். அமைச்சராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிவிட்டன. அமைச்சரான பின்னர் நான் போட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கான கையெழுத்து தான்.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 25ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும். அந்த போட்டிகளை காண முதல்வர் நேரில் வரவுள்ளார். ஆகஸ்ட் மாதம் சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. மத்திய விளையாட்டு துறை நமது செயல்பாடுகளை பார்த்து இந்தாண்டு கேளோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை விளையாட்டிலும் முதல் மாநிலமாக கொண்டுவர தொடர்ந்து செல்படுவோம். தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம். சரவேதச அளவிலான விளையாட்டு அரங்கம் தமிழகத்தில் அமைக்கும் பனி ஆகியவை செயல்பாட்டில் உள்ளன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.