பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Udhayanithi

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் அமைச்சர் உதயநிதி, குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகாரங்கள் என்ற புத்தகத்தை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கருது பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் – அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் – அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்