Udhaystalin [Image Source : Twitter /@Udhaystalin]
சனாதனம் குறித்த பேச்சால் சர்ச்சை எழுந்த நிலையில், அந்தக் கருத்தை தெரிவிக்க என்ன காரணம் என்று உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தற்போதைய நேரத்தில் சனாதானத்தை எதிர்ப்பதை காட்டிலும் சனாதனத்தை ஒழிப்பதே சிறந்தது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா, போன்ற தொற்று நோய்களை எதிர்க்க மக்கள் போராட மாட்டார்கள், அவற்றை ஒழிக்கத்தான் செய்வார்கள். அது போல தான் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது ஒன்று என பேசி இருந்தார். இதற்கு, கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதி பேச்சுக்க கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அமித்ஷா பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி,”எதுவுமே மாறாமல் நிலையாக இருக்க வேண்டும், எல்லாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று விளக்கம் சொல்கிறார்கள். அந்த கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன்.
எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலை உருவாக வேண்டும் என்று சொல்வதே திராவிடம். சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே, அதை பாஜக திரித்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை இப்போது கையில் எடுத்துள்ளனர். எப்போதுமே பொய்ச் செய்திகளை பரப்புவதுதான் பாஜகவின் வேலை என்று அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும்…
டெல்லி : ஜூலை 23 அன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து…
தூத்துக்குடி : மாவட்டத்தில், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025 ஜூலை 31 அன்று…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி…