போர் நிறுத்தம் செய்ய ட்ரம்ப் யார்? டென்ஷனாகி விமர்சித்த ராகுல் காந்தி!

பிரதமரால் ஒரு அறிக்கை கூட கொடுக்க முடியவில்லை. டொனால்ட் ட்ரம்ப் 25 முறை தான் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக சொன்னார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

rahul gandhi donald trump

டெல்லி : ஜூலை 23 அன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பெருமை பேசுவதாக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தை ட்ரம்ப் செய்தார் என்று பிரதமர் சொல்வாரா? இல்லை, அவர் அதை சொல்ல மாட்டார். ஆனால், ட்ரம்ப்தான் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தார் என்பதுதான் உண்மை.

இது வெறும் போர் நிறுத்தத்தைப் பற்றி மட்டும் அல்ல, நம் பாதுகாப்புத் துறை, ஆபரேஷன் சிந்தூர் பற்றியது. இவற்றைப் பற்றி விவாதங்கள் நடத்த வேண்டும்,” என்று கூறினார். ராகுல் காந்தி மேலும் குறிப்பிட்டதாவது, “ட்ரம்ப் 25 முறை தான்தான் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக கூறுகிறார். அதை செய்ய ட்ரம்ப் யார்? அது அவரின் வேலை அல்ல. ஆனால், பிரதமர் மோடி ஒரு முறை கூட இதற்கு பதில் சொல்லவில்லை. இதில் ஏதோ மறைவான விஷயம் இருக்கிறது (தால் மே குச் காலா ஹை),” என்று குற்றம்சாட்டினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 2025 மே 10 அன்று, நான்கு நாள் மோதலுக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவ இயக்குநர்களின் (DGMO) நேரடி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்டியதாக இந்திய அரசு தெரிவித்தது, ஆனால் ட்ரம்ப் இதை அமெரிக்காவின் மத்தியஸ்தம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். மோதல் ஏற்பட்டு பேச்சுவார்த்தை நிறுத்தியதாக வெளியான அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த மோதலில் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகவும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தத்தை எட்டியதாகவும் தொடர்ச்சியாகவே கூறி கொண்டிருந்தார். இது  இந்திய அரசால் மறுக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சகம், “போர் நிறுத்தம் இரு நாட்டு ராணுவங்களின் நேரடி பேச்சுவார்த்தையால் மட்டுமே நடந்தது,” என்று தெளிவுபடுத்தியது. ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனத்தை கேள்வி கேட்டார். “அமெரிக்க அதிபர் தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மை குறித்து கேள்வி எழுப்பும் வகையில் பேசுகிறார். ஆனால், பிரதமர் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் உள்ள பலவீனத்தை காட்டுகிறது,” என்று அவர் குற்றம்சாட்டினார். அது மட்டுமின்றி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான விவகாரங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், “இது வெறும் போர் நிறுத்தம் மட்டுமல்ல, நமது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றிய முக்கியமான விஷயம்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறது. ட்ரம்பின் கூற்றுகள், இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடான, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுடனான பிரச்சினைகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்ற கொள்கையை மீறுவதாக உள்ளது. “ட்ரம்ப் 25 முறை தனது மத்தியஸ்தத்தைப் பற்றி பேசியுள்ளார், ஆனால் இந்திய அரசு இதை மறுக்கவோ, தெளிவான பதிலை அளிக்கவோ தவறிவிட்டது. இது நாட்டின் இறையாண்மை மற்றும் வெளியுறவுக் கொள்கையில் கேள்விகளை எழுப்புகிறது,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த விவாதம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்