முதல்வர் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
வருகின்ற 7ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 133 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க முக ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார். இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கினார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆளுநர் மளிகை சென்றிருந்தனர்.
இந்த நிலையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்தடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் முக ஸ்டாலின் வழங்கினார் என்றும் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் எனவும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…