திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சொத்து மதிப்பு கடந்த 2016-ஐ விட தற்போது 3 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்கள் அறிவிப்பினை அறிவித்து வருகின்றனர்.
இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட அயனவரத்தில் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சொத்து மதிப்பு கடந்த 2016-ஐ விட தற்போது 3 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலினின் அசையா சொத்து ரூ.4,72,43,882 கோடியாக இருந்துள்ளது. பின்னர், 2021-ஆம் ஆண்டு அசையா சொத்து ரூ.3,63,37,693 கோடியாக உள்ளது. இதனால், அசையா சொத்தின் மதிப்பு ரூ.1,09,06,189 சரிவை கண்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.1,11,59,079 கோடியாக இருந்துள்ளது. பின்னர், 2021-ஆம் ஆண்டு அசையும் சொத்து ரூ.5,25,37,646 கோடியாக உள்ளது. இதனால், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4,13,78,567 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…