காரை மறித்து வெள்ளைத்தாளில் எம்.எல்.ஏவை கையெழுத்து போட வைத்த அரசு பள்ளி மாணவர்கள்!எதற்கு என்று தெரியுமா..?

Published by
kavitha

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.இதனை தமிழக அரசின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வழங்கினார்.
Related image
இந்நிலையில் 2017-2018 ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2018-2019 மற்றும்  2019-2020 ஆண்டில் படித்து முடித்த மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.இதனை மாணவர்களுக்கு வழங்க மானமதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் வந்தார்.மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கிய போது மடிக்கணினி வாங்காத  பழைய மாணவர்கள் மத்தியில் இந்த  நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியது இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கொம்புகாரனேந்தல் அரசு பள்ளியில் மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த தகவலை அறிந்த கட்டிக்குளம்  கிராம மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினரின் காரை இடை மறித்து போராட்டத்தில் இறங்கினார்.அங்கு விரைந்த போலிசார்  மாணவர்களிடம் சமாதானம் பேசினார் ஆனால் மாணவர்கள் அசைந்து கொடுக்கவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.கடும் கோபத்தோடு சட்டமன்ற உறுப்பினரை அணுகினர்.

இந்த குழப்பம் நிறைந்த சம்பவத்தை உற்று நோக்கி கொண்டிருந்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ நாகராஜன் கட்டிக்குளம் அரசு பள்ளியில் பயின்ற 2017-2018 மற்றும்      2018-2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கமால் தற்போது பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க மாட்டேன்.என்று வெள்ளைத்தாளில் எழுதி பச்சை மை பேனாவால் கையெழுத்து போட்டு அதை மாணவர்களிடம் கொடுத்தார்.
வெள்ளைப் பேப்பரில் எம்எல்ஏ வை  மாணவர்கள் கையெழுத்து இட வைத்த சம்பவம்   பரபரப்பாக அந்த பகுதிகளில் பேசப்பட்டது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago