,

சென்னையில் மோடி – சற்று நேரத்தில் ரூ.8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.!

By

தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடி ஹாலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பழனிசாமி மோடியை வரவேற்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக சார்பில் எல் முருகன், சிடி ரவி உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் இருந்து சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று  தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி பயணிக்கும் சாலையின் இருபுறமும் அதிமுக, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Dinasuvadu Media @2023