மோடி கூறுவது அபாண்டமான பொய் – மு.க. ஸ்டாலின் விமர்சனம்..!

Published by
murugan

சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, 1989-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தி.மு.கவினரால் அவமானப்படுத்தப்பட்டதாக மோடி கூறுவது அபாண்டமான பொய், உயரிய பதவியில் இருப்பதை மறந்து பிரதமர் மோடி பொய் பேசி இருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அதிமுகவினர் திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. 1989 மார்ச் 25-ல் கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்வதை தடுக்க திட்டமிட்டு அதிமுகவினர்  நாடகம் நடத்தினர். அதிமுகவினர் நாடகத்தை சட்டப்பேரவையிலேயே அப்போதைய எம்.எல்.ஏ  திருநாவுக்கரசர் அம்பலப்படுத்தினார். திருநாவுக்கரசர்  பேச்சு சட்டப்பேரவைக் குறிப்பில் தற்போதும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் எந்த பொய் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

2014-2016-ல் ஜெயலலிதாவை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என மோடி பேசினார். யாரோ கூறுகிறார்கள் என்பதற்காக எதையாவது பிரதமர் பேசலாமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதிமுகவினரின் ஊழல் குறித்து புள்ளி விவரத்துடன் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். ரவுடிகளை கட்சியில் சேர்த்துள்ள நீங்கள் சட்ட ஒழுங்கை காப்பற்றுவோம் என்கிறீர்கள் 125 நாட்களாக விவசாயிகள் மழை பனியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளை அழைத்து பிரதமர் மோடி பேசினாரா..? மோடிக்கு லாலி பாடும் அடிமை ஆட்சிதான் அதிமுக ஆட்சி என கூறினார்.

Published by
murugan

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

4 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

6 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

7 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

8 hours ago