வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது, அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அமல்படுத்தி உள்ளோம் .
இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, அனைத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளோம். வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது, அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்றும் தெரிவித்தார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…