மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2-வது தெருவை சார்ந்த சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத் , அசாருதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான அசாருதீன் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார்.
இதனால் அடிக்கடி வீட்டில் வந்து தனது தாய் மற்றும் தந்தையிடம் போதைப்பொருள் அதாவது கஞ்சா வாங்க காசு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் அண்ணன் யாசரை தகாத வார்த்தைகள் பேசி பிரச்சினை செய்துவந்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் அண்ணன் யாசர் இருவரும் சேர்ந்து அசாருதீன் கை ,கால்கள் பிடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அசாருதீன் உடலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…