ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத ராணுவ வீரர்!

ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத்த ராணுவ வீரர்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசரத் தேவைக்குக் கூட, வெளி மாநிலங்களில் இருந்து வரவோ, அல்லது இங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி, அழகா கவுண்டன் ஊரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது(65). இவர்களது மகன் சக்திவேல்(42). ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை சக்திவேலின் தாய் மாது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ராஜஸ்தான் ரெஜிமெண்ட்டில் உள்ள சக்திவேலுக்கு, அவரது தந்தை செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் சக்திவேல் ராஜஸ்தானிலிருந்து மேச்சேரி வர இயலவில்லை.
இதனால் தனது தாயின் இறுதிச் சடங்கை வீடியோகால் மூலம் பார்த்துள்ளார். இதனை பார்த்த சக்திவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ இணைய தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025