நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர் .
அப்போது 3 கார்களில் அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 3 பேரையும் அரிவாள் மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரும் முதலில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…