விசாரணைக்கு பின் காவலர்கள் மீது கொலை வழக்கு..? சிபிசிஐடி தகவல்..!?

விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவது பற்றி முடிவெடுக்கப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தகவல்.
சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனால், இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் விவகாரத்தில் விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவது பற்றி முடிவெடுக்கப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025