காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொலை.!காதல் கணவன் தப்பி ஓட்டம்..!

Published by
kavitha

மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் ஆனது மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் நடந்துள்ளது.இந்த பகுதியை சேர்ந்தவர் அசோக் வயது 32ஆகிறது. இவருடைய மனைவி சுதா வயது 27 ஆகிறது. இருவரும் காதலித்து  திருமணம் செய்து கொண்டவர்கள்.திருமணம் ஆகி ஒரு பெண், மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் மனைவி சுதா வேலை பார்க்கும் இடத்திற்கு  அடிக்கடி சென்று பணம் வாங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்  சுதா வேலை தொடர்பாக  கோயம்புத்தூர் சென்றுள்ளார் தான் கோயம்புத்தூர் செல்வது குறித்து கணவரிடம் கூறாமல் சென்றுள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த அசோக் தனது 2 குழந்தைகளை தன் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு விட்டு வந்துள்ளார். இதற்கிடையில் கோயம்புத்தூரில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுதா குழந்தைகளை அழைத்து வரும்படி  அசோக்கிடம் கூறியுள்ளார்.அசோக் தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.குழந்தைகள் எங்கே என்று மனைவி சுதா கேட்க கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு உச்சக்கட்டத்திற்கு சென்ற நிலையில் கணவன் தன்னுடைய மனைவி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் இக்கொலை குறித்து தகவலறிந்து வந்த திருநகர் போலீசார் இறந்து கிடந்த சுதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அசோக்கின் பெற்றோர்களை  காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அசோக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

4 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago