, ,

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

By

பள்ளிகளில் சமீப நாட்களாக ஆசிரியர்களுக்கு மாணவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க தற்போது பள்ளிக்கல்வித்துறை அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை உத்தரவு 

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

படிக்கட்டுகளில் பயணம் 

படிக்கட்டிகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பது, பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது, மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை தனியாகக் கண்டறிந்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Dinasuvadu Media @2023