என் அனுபவம் தான் உதயநிதியின் வயது., அவர் அதிமுகவை பற்றி பேசுவதா?- முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.884 கோடி வழங்கப்பட்டுள்ளது என பேசிய முதல்வர், அதிகாரம் இருந்த போது திமுக மக்களுக்களிடம் மனு வாங்கவில்லை என்றும் இப்போது மேடையில் பெட்டி வைத்துக் கொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் எனவும் கூறியுள்ளார். திமுக மக்களை ஏமாற்றி வருகிறார்கள், ஒரு ஐந்து முறை ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வர், உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது ஏன் திட்டங்களை நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.

திமுகவினரை கண்டாலே மக்களுக்கு அலர்ஜி. அப்படிப்பட்ட கட்சி தான் திமுக. சட்ட ஒழுங்கு பேணி காப்பதில் தமிழகம் முதலிடம். இதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் ஸ்டாலின். அதிமுக ஜனநாயக கட்சி கீழே இருக்கின்றவர்கள் கூட முதல்வராக முடியும். திமுக கட்சியில் வரவே முடியாது. வாரிசு அரசியல் செய்கிறார்கள், கலைஞர் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்கிறார்கள் என குற்றசாட்டினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம். இவர் அதிமுகவை குறித்து குற்றம் கூறி பிரச்சாரம் செய்கிறார். என் அனுபவம் தான் உதயநிதி ஸ்டாலின் வயது, அவர் அதிமுகவை பற்றி பேசுவதா?. தற்போது திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார். அந்தளவு திமுக படும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இன்று மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி தொடங்கவில்லை, குடும்பத்துக்கு நல்லது செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சி என விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

6 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

8 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

9 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

10 hours ago