வாக்களிக்கத்தவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு : முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம் என முதல்வர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்று தான் என்ற எண்ணத்தோடு தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற விழாக்கள் மூலம், ஒற்றுமை, இணக்கம் வளர்கிறது. கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம்; சொல்லாததையும் நிறைவேற்றியிருக்கிறோம். வாக்களிக்கத்தவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
மேலும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள், மக்கள் கேட்காமலேயே கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நாங்கள் அதனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025