600 படுக்கைகள் கொண்ட வார்டாக மாற்றப்படும் நந்தம்பாக்கம் ட்ரேடு சென்டர்.!

சென்னை விமான நிலையத்திற்கு 5 கிலோ மீட்டர் அருகில் உள்ள டிரேட் சென்டர். இந்த இடத்தில் உலக முதலீட்டு மாநாடு போன்ற பல்வேறு விழாக்கள், சென்னையில் நடக்க கூடிய பெரிய விழாக்கள் நடத்தக் கூடிய இடமாக உள்ளது.
25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இந்த பகுதியில் காய்ச்சல், சளி அதிகமாக இருக்கும் அறிகுறி இருந்தால் இங்கே கொண்டு வந்ததற்காக 600 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நோயாளிக்கு ஒரு ரூம் என்ற அடிப்படையில் சின்ன சின்ன அறைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த 25 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவர்கள் தங்குவதற்கும் உணவு சமைக்க , கார் பார்க்கிங் , ஆம்புலன்ஸ் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எடுத்துள்ளார்கள். இந்த இடம் மட்டுமில்லாமல் சென்னையில் 34 இடங்கள் எடுக்கப்பட்டுள்ளதாம் அதாவது ரயில் பெட்டிகள், பள்ளி கூடங்கள், பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிரேட் சென்டரில் அமைக்கப்பட்டுள்ள 600 படுக்கைகள் கொண்ட வார்டு விரைவில் செயல்பட துவங்கும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025