நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சில மாணவர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றது. மேலும் நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,நீட் விவகாரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு நீங்கள் செய்வது மிகப்பெரிய துரோகம் ஆகும் என்று பேசினார்.இதற்கு பதில் அளித்து பேசிய, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசின் நிலைப்பாடு துரோகம் என்றால், அந்த துரோகத்திற்கு விதை போட்டது காங்கிரஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக பொருளாளரும் ,சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் பேசுகையில், ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர்.மறைந்த முதமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது என்று துரைமுருகன் பேசினார்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…