நீட் – உள்ளாடையை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது – அமைச்சர் சேகர்பாபு

sekar babu

நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் பேட்டி.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார், 499 நகரங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேர்வு எழுத வந்த மாணவர்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அமைக்கப்பட்டிருந்த மையங்களில் தேர்வு எழுதினர். இந்த சமயத்தில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. அப்போது, தேர்வு எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்ற சொன்னதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சோதனையின் போது மாணவியின் உள்ளாடையை சோதனை செய்து அகற்ற சொன்னதால் அந்த மாணவி சங்கடத்திற்குள்ளானார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்