ம.பி.யில் விபத்து…50 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து…15 பேர் பலி.!!

bus falls from a bridge in Khargone

கார்கோனில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. போராட் ஆற்றின் 50 அடி உயர பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று கீழே விழுந்தது. இதனால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி 15 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

எம்பி10-பி-7755 என்ற பேருந்து எண் கார்கோனிலிருந்து இந்தூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கார்கோன்-திக்ரி சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்து ஆற்றின் மீது உள்ள பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த நிலையில்,  திடீரென கீழே விழுந்தது. இதனால் அப்போது பலத்த சத்தம் ஏற்பட்டது.

இதனையடுத்து, கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் பணியில் கிராம மக்களுடன் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரும் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர், கிளீனர் ஆகியோரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்கோனில் நடந்த பேருந்து விபத்துக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்