அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளராக வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி பா. வளர்மதி அவர்களும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக மகளிர் அணி நிர்வாகிகள்:
செயலாளர்- திருமதி பா. வளர்மதி, (B.A.) அவர்கள் (கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்)
இணைச்செயலாளர்- திருமதி மரகதம் குமாரவேல், B.A., M.L.A., அவர்கள் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கழக இலக்கிய அணி:
செயலாளர்- முனைவர் வைகைச்செல்வன் , M.A., B.L, D.Ed., D.Lit., Ph.D.. அவர்கள் (கழக செய்தித்தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)
கழக வர்த்தக அணி நிர்வாகிகள்:
செயலாளர்- திரு. V.N.P. வெங்கட்ராமன், B.E., Ex. M.L.A., அவர்கள் (ஆலத்தூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் சென்னை புறநகர் மாவட்டம் )
இணைச்செயலாளர்- திரு. A.M. ஆனந்தராஜா அவர்கள் (சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்)
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…