புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆனாலும் புதிய கல்வி வரைவு கொள்கையை நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
பின் கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து கூற அவகாசம் வழங்க கோரி தமிழக தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததால் மத்திய அரசு அவகாசத்தை கூட்டி உத்தரவு பிறப்பித்தது.ஜூலை 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிய உள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…