புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான கொண்டாட்டம் நடைபெற உள்ளது.இதையொட்டி சென்னை போலீஸ் சார்பில் முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சுமார் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
முக்கிய சாலைகளான மெரினா,சாந்தோம் ,காமராஜர் சாலை ,எலியட்ஸ் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வாகன ரசிங் ,குடிபோதையில் தகராறு ஆகியவற்றை கண்காணித்து தடுக்கும் பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள்.குடி போதையில் சிக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…