#NivarCyclone : அதி தீவிர புயலாக வலுபெற்றது நிவர் புயல்!
அதி தீவிர புயலாக மாறியுள்ள புயலின் தீவிரம், இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் .
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கொண்டுள்ள நிவர் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ, சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதி தீவிர புயலாக மாறியுள்ள புயலின் தீவிரம், இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என்றும், அதன் ஒரு பகுதி இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடக்க கூடும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த புயலின் மைய பகுதி கரையை கடப்பதற்கு, சுமார் இரண்டரை மணி நேர ஆகும் என தெரிவித்துள்ளார்.