பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை – இபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டுசென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்பட 82 பேர் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ளனர்.

நடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளது. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மக்களிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்து சொல்லுங்கள். தேர்தல் பணியில் மாவட்ட செயலர்கள் தலையீடு இருந்தால் புகாரளிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார். மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். இதனிடையே, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நமது ஒரே எதிரியான திமுகவை தோற்கடிப்பது தான் இலக்கு. தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. லியோ பட விவகாரத்தில் வேண்டுமென்றே தொல்லை கொடுக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே இதுதான் பிரச்சனை, திரைத்துறை சுதந்திரமாக செயல்பட முடியாது. அதிமுக ஆட்சியின் போதே விஜய் படம் வெளியாக எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட வழி வகுத்தது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago