RN Ravi : தமிழக மக்களின் கருத்துகளை கேட்க கூட குடியரசு தலைவர் அவகாசம் தரவில்லை.! வைகோ பரபரப்பு பேட்டி.! 

MDMK Leader Vaiko - Tamilnadu Governor RN Ravi

தமிழக அரசுக்கும் , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையான கருத்து மோதல்கள், நிர்வாக ரீதியிலான வேறுபாடுகள் ஆகியவை தொடர்ந்து கொண்டு இறுகின்றன. இதனை குறிப்பிட்டு ஆளுநர் ரவிக்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , மதிமுக கட்சி சார்பில் அக்கட்சி நிறுவனர் வைகோ  தலைமையில் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி 50 லட்சம் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டது. அது குறித்த கோப்புகளை குடியரசு தலைவரை சந்தித்து அளிக்க வைகோ திட்டமிட்டு இருந்தார். ஆனால் குடியரசு தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக தலைவர் வைகோ, தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஆளுநர் ரவி ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இதனால் ஆளுநர் ரவியை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி அதில், 57 எம்பிக்கள், 32 எம்எல்ஏக்கள்  50 லட்சம் பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளார்கள். இதனை குடியரசு தலைவர்களிடத்தில் ஒப்படைக்க கடந்த ஆகஸ்ட் 9 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சந்திக்க அனுமதி கோரினோம். ஆனால் சந்திக்க அனுமதி தரவில்லை.

அதற்கடுத்து ஆகஸ்ட் 25ஆம் தேதியும் அனுமதி கேட்டோம். ஆனால குடியரசு தலைவருக்கு கடுமையான பணிச்சுமை காரணமாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும், தமிழக மக்களின் கருத்துக்களை கூட கேட்க முடியாமல் , கால அவகாசம் அளிக்காமல் இருந்து வருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது.

அதன் காரணமாக அணைத்து கையெழுத்து கோப்புகளையும் 60 பெட்டிகளில் அடைத்து அதனை சென்னையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு கொண்டு வந்துள்ளோம். இதனை குடியரசு தலைவர் அலுவலகத்திலாவது கொண்டு சேர்க்க உள்ளோம்.  இதற்கு முன்னர் இதுபோல கையெழுத்திட்டு யாரும் ஆளுநரை திரும்ப பெற கோரியதில்லை என்றும் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்