Notice for Hotels: ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி .! சுகாதார குறைபாடு உள்ள 10 உணவகங்களுக்கு நோட்டீஸ்.!

Published by
செந்தில்குமார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி நேற்று உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக ஷவர்மா வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி கலையரசிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஷவர்மாவை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் நகரில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது தாயார் சுஜாதா, மாமா, அத்தை மற்றும் தம்பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நாமக்கலில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்படி, உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும் என்றும் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் நாமக்கலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வில் சுகாதார குறைபாடு உள்ள 10 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தந்தை முகமது நபி வீசிய பந்து.. சிக்சருக்கு பறக்கவிட்ட மகன்! வைரலாகும் வீடியோ!

காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…

8 hours ago

அப்ரூவராக மாறும் ஆய்வாளர் ஸ்ரீதர்! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…

9 hours ago

#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…

10 hours ago

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…

10 hours ago

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

11 hours ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

12 hours ago