murder [file image]
மதுரை : தொடர்ச்சியாக மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி. இவர் சடலமாக தன்னுடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி முத்துலெட்சுமி அணிந்திருந்த கம்மலை காணாததால், நகைக்காக கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக கடந்த ஜூலை 8-ஆம் தேதி திருமங்கலம் அருகே பெரிய வாகைகுளம் மாயேன் நகரை சேர்ந்த காசம்மாள் (70) மூதாட்டியை மர்ம நபர்கள்கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஜூலை 12 மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டிகள் தொடர் கொலை சம்பவம் மதுரையில் நடைபெற்று வருவதால், நகைக்காக கொலை சம்பவங்களா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…