தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றனர். இதனால் விமசனங்கள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில், 6 மாதத்தில் விடியல் பிறக்கும் என முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் காமராஜ், ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் கனவு தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறிய அவர், வேளாண் மசோதா தாக்கல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதற்கட்ட சோதனை சில மாவட்டங்களில் சோதித்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…