சென்னையின் புறநகர் பகுதி செங்கல்பட்டு மாவட்டமாகும்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி குப்பம், கிழக்கு கடற்கரை சாலையில், கார் ஒன்று சென்னை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் கார் வேகமாக வந்துகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதியுள்ளது.
தொடர்ந்து கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கார் தீப்பற்றியது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர்.மேலும் சுமார் 1 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் அங்கிருந்த மக்கள் காயமடைந்தவர்களை வாகனங்களிலும் காவல்துறையினர் வாகனங்களிலும் சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த காரில் பயணம் செய்தவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த மூன்று பெண்கள், நான்கு ஆண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் பயணம் செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விபத்து காரணமாக பூந்தமல்லியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காரில் இருந்த மற்ற ஏழு நபர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…