“அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை” என சசிகலா ஆதரவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக தொண்டர்களை கட்சி தலைமையில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சசிகலா அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசி வருகிறார்.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டுவது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சசிகலாவிடம் பேசியதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எடப்பாடி சுரேஷ் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளார்.
சசிகலாவின் ஆதரவாளரான இவர் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது, அதிமுகவிலிருந்து யாரையும் நீக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி தலைமையிடத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…