துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார்.
அதிமுகவில் 50 நாட்களாக ஏற்பட்ட குழப்பம், இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அவரை பூங்கோத்து கொடுத்து வரவேற்றார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முதல்வரிடம் அதிமுக எம்.பி. மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத், ஆசிபெற்றார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…