அதிமுக பெயரை பயன்படுத்த மாட்டோம் .. ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம்!

Published by
பாலா கலியமூர்த்தி

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. இதன்பின், கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார்.

இபிஎஸ் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்படும் சமயத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே  தீர்ப்பு சாதகமாக அமைந்தது. அதே வேளையில், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.

4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.!

இந்த சூழலில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், அதிமுக பெயர் அடங்கிய லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனை குறிப்பிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக தொடர்புடையதை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது.

இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓபிஎஸ், அதிமுக சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு முன்பு நடந்த விசாரணையில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. அதாவது, உயர்நீதிமன்றத்தின் மறுஉத்தரவு வரும் வரை இவற்றை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவர எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் -க்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Recent Posts

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

7 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

3 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago