தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 7 பேரை நீக்கம் செய்து இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மேலும் 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், சேலம் […]
கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ‘ராஜினாமா’ செய்ய வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் கட்சியில் இருந்து கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்திய ரவிக்குமார் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துள்ளார். சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், திருச்செந்தூர் சென்றுள்ள சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசி வருகிறார். இதனிடையே, தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பால் மேலும் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் போக்சோ […]
மதுரையில் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வாகன மாசை குறைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மின்சார வாகனங்களிலோ, சைக்கிளிலோ, நடந்தோ வருமாறு அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் அரசு அலுவலர்கள் சொந்த வாகனத்தில் வருவதை தவிர்த்துவிட்டு, பொது பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்களையும் பொது போக்குவரத்தை பயன்படுத்த கோருமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாணவர்களை மீட்பதற்கான […]
தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட […]
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இதில் சில இடங்களில் வேட்பாளர் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சில இடங்களில் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ரத்தான […]
ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது. சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறது. […]
தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாணவர்களை மீட்பதற்கான […]
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை […]
தேனீ மாவட்டத்தில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினாலும், கட்சியில் இருந்து 7 பேரை நீக்கம் செய்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி, திரு. R. ஜெகதீசன், (சின்னமனூர் நகர 10-ஆவது வார்டு […]
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், […]
இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளனர். அதில் திமுக 24, காங்கிரஸ் 7 , மதிமுக 1 என மொத்தமாக 32 திமுக கூட்டணி கவுன்சிலர்கள் உள்ளனர். அதேநேரத்தில் பாஜக 11, அதிமுக 7 , சுயேச்சை 2 என பாஜக பக்கம் 20 கவுன்சிலர்கள் உள்ளனர். இன்று […]
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தவிர பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது. இது ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் […]