சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் தலைமை காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராஜ் தலைமறைவான நிலையில் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. நேற்று ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை வருகின்ற 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் முட்டை விலை மாற்றமின்றி 3.70 காசாகவே நீடிக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல் […]
திமுகவில் இருந்து விலகிய வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் . இதனால், துணைப் பொதுச்செயலாளராக அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்து தமிழக பாஜக தலைவர் முருகன் உத்தரவு […]
அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமி காணாமல் போன நிலையில், அவரது உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அறந்தாங்கி அருகே […]
தமிழகத்தில் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திக் சத்துணவு திட்ட மாணவர்களுக்கான முட்டை மற்றும் மாணவிகளுக்கான நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், எப்படி நாப்கின், முட்டை வழங்கப்பட உள்ளது என்பதை […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற லாக்கப் இரட்டைப் படுகொலையை மையமாக வைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் இந்தியாவையே உலுக்கும் அளவிற்கு பெரிய போராட்டமாக வெடித்த சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதை கொலைகள் இந்தியா முழுவதையுமே மிகவும் உலுக்கியது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தூண்டுதல் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியாக […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் […]
காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் மற்றும் திராட்சை மாதுளை பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கும். ஆப்பிள்: காலையில் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது . இந்த பழத்தை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து உடலை […]
கோவை அரசு மருத்துவர் பன்னீர்செல்வத்தை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காரணமாக சுகாதார சீர்கேடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், […]
சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. இதைதொடர்ந்து, 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஹேமா முன் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை […]
சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்தனர். இதனால், 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு நிலையில் தற்போது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 உயிரிழப்பு . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இன்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இருவருரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, சிபிசிஐடி 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில், தற்போது ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதனால், கைது செய்யப்பட்ட 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். […]
தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன உபகரணங்கள் மற்றும் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் உருவாக்காட்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிடி ஸ்கேன்,மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளை […]
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 38,947 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், […]
தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது என […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 3,095 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 56,021பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 56,021 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா […]
NLC விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். […]